Search

இனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்! NCERT அறிக்கை பட்டியல்

Friday, 17 July 2020


நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில், மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும் வழிகாட்டுதல்களின் தற்காலிக பட்டியலை என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, பள்ளி திறந்தவுடன் ஒரு வகுப்பின் மாணவர்கள் ஒன்றாகப் பள்ளிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். வாரத்தில் மூன்று நாட்கள் 'ஆட்' & 'ஈவன்' நம்பர் பார்முலா முறையில், ரோல் நம்பரின் படி இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் செயல்படும்.முதலாவதாக 'ஆட்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். இரண்டாவதாக   'ஈவன்' நம்பரில் இருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும்.இதில், ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்ப தலா 10 நிமிடங்கள் இடைவெளி கொடுக்க வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற, திறந்த வெளியில் வகுப்புகளை நடத்துவது நல்லது என்றும் தன் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது என்.சி.இ.ஆர்.டி.

6 கட்டங்களாக திறக்கப்படும் பள்ளிகள்:

முதல் கட்டமாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடங்கப்படும், ஒரு வாரம் கழித்து இரண்டாம் கட்டமாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும், 2 வாரம் கழித்து மூன்றாம் கட்டமாக 6வது முதல் 8ஆம் வகுப்பு வரைவுள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.நான்காம் கட்டமாக, மூன்று வாரம் கழித்து, மூன்றாம் வகுப்பு முதல் 5வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 5ஆம் கட்டமாக, 4 வாரம் கழித்து 1வது மற்றும் 2வது வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.5 வாரம் கழித்து, அதாவது 6து கட்டத்தில், மழலையர்பள்ளி பள்ளிகள் மற்றும் எல்.கே.ஜி மாணவர்களுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பின்பற்றப்படும் நடவடிக்கைகள் :

* ஒரு வகுப்பில் 30 முதல் 35 மாணவர்கள் வரை தான் இருக்க வேண்டும், கட்டாயம் மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

* வகுப்பறையில், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டும்.

* ஏ.சி போடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஒரு மாணவர் அமரும் நாற்காலியில், வேறோரு மாணவர் அமரக்கூடாது.

* மாணவர்கள் தினமும் ஒரே நாற்காலியில் தான் அமர வேண்டும்.

* வகுப்புகள் தொடங்கிய பின் 15 நாட்களுக்கு ஒரு முறை குழந்தையின் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோர்களிடம் பேச வேண்டும்.

* பள்ளி நிர்வாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்குள் நுழைவதற்கு முன் ஒரு முறை உடல் வெப்பம் அனைத்தும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* மேலும், பெண், பென்சில், உணவு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

* ஒவ்வோருவரும் தனியாக தண்ணீர் கேன் கொண்டு வர வேண்டும்.

* முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்று.

* அதேபோல், மருத்துவத் துறையில் மற்றும் பாதுகாப்புப் பணியில் வேலை செய்யும் பெற்றோர்கள் முன்கூட்டியே அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.

* தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்கள் மட்டுமே ஆசிரியர்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.

* பள்ளிகளில் ஒருபோதும் ஆசிரியர்களுடன் எந்த விதமான சந்திப்பும் பெற்றோர்களுக்கு ஏற்பாடு செய்யப்படாது.

* விடுதியைப் பொருத்தவரை, 6 அடி இடைவெளியில் தான் மாணவர்களின் படுக்கைகள் இருக்க வேண்டும்.

ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து அறிவித்த பாடகர்…..!

இந்திய இசை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரீட்சையமான பெயர் பி பிராக் (B Praak).
அவர், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து அறிவித்துள்ளார்.
மேலும் நான் கடந்த 9 மாதங்களாக உங்களை பாத்துக்கொண்டிருக்கிறேன்.தாங்க முடியாத வலி, தூங்காத இரவுகள், இதெல்லாம் யாராலும் செய்ய முடியாது. அம்மாவால் மட்டுமே முடியும் என்று உருக்கமாக மனைவியை பாராட்டியுள்ளார் .

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு.

Thursday, 16 July 2020

IMG_20200716_181900
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு
PicsArt_07-16-06.27.53_wm

வருகிற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வருகிற திங்கட்கிழமை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

www.tngasa.in

www.tndceonline.org

www.tngptc.in

www.tngptc.com

ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்

Flash News : TNPSC - Results of Departmental Examinations - Dec 2019 Published

புதிய பாடத்திட்டம் மூன்று சவால்கள்

images%2528159%2529

ஒரு நாடு அல்லது மாநிலத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை உலகத் தரத்தோடு போட்டியிடும் வகையில் பராமரிக்க வேண்டும் என்றால், பள்ளிக் கல்விக்கான பாடங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், அதன் கல்வித் திட்டம், பாடத்திட்டம் ஆகியவையும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆனால், தமிழகத்தில் 2010 வாக்கில் ஒரே சீரான சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பின்னரே தற்போதைய புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் சுமையாக இருப்பதாகச் சமீபத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. பாடத்திட்டம் சுமையா; அல்லது அதை எப்படி எதிர்கொள்வது என்பது சுமையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சமகாலத்தில் உருவாக்கப்படும் ஒரு பாடத்திட்டம், எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறது என்கிற புரிதல் அவசியம் ஆகிறது.

தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்டம் எதிர்கொண்ட முதல் சவால், அதைப் புதுப்பிப்பதில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டிருந்ததால், இடைப்பட்ட காலகட்டத்தில் வளர்ந்திருந்த உயர் கல்விக்கான பாடங்களுக்கும் பள்ளிப் பாடத்திட்டத்துக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதனால், உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் தடுமாறுவதும் தோல்வியுறுவதும் இடைநிற்பதும் நடந்தது. இரண்டாவது சவால், ‘ஜேஇஇ’, ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், நம்முடைய பாடத்திட்டத்தை வலுவானதாக்க வேண்டியிருந்தது. மூன்றாவது சவால், உலகப் போக்குக்கும் நாடு தழுவிய அளவிலான போக்குக்கும் தமிழ்நாட்டுப் பாடத்திட்டம் ஈடுகொடுப்பதாக இருக்க வேண்டியிருந்தது. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு வரையான உயர்நிலைப் படிப்பானது அடிப்படைக் கல்வி என்றால், 11, 12 வகுப்புகளுக்கான மேல்நிலைப் படிப்பிலேயே துறைசார் கல்வி தொடங்கிவிடுகிறது என்பதுதான் உண்மை. அதாவது, பின்னாளில் கல்லூரியில் தான் படிக்கவிருக்கும் பாடங்களுக்கான தொடக்கத்தையே ஒரு மாணவர் மேல்நிலை வகுப்புகளில் படிக்கிறார். துறைசார் கல்வி என்பது உலகமயமாக்கல் சூழ்நிலையில் உலகளாவிய போட்டியைச் சமாளிக்கும் வகையில் ஈடுகொடுக்கும் தேவையையும் உள்ளடக்கியது. இதற்கான அடித்தளமாக ஒரு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம் இருக்க வேண்டியது அவசியம்.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் புதிய பாடத்திட்டக் குழு, கல்வித் திட்டத்தையும் பாடத்திட்டத்தையும் உருவாக்கியது. இவற்றை வடிவமைப்பதில் துறைசார் கல்வியாளர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரது தொடர் ஆலோசனைகள் கோரப்பட்டாலும், அவை ஒவ்வொரு கட்டத்திலும் இணையத்தில் வெளியிடப்பட்டு ஆசிரியர்கள் மாணாக்கர்கள், குறிப்பாகப் பொதுமக்கள் கருத்துகளையும் சேகரித்து, அவற்றையும் பரிசீலித்தே பாடங்களுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. புதிய பாடங்கள் அனைத்தையும் எழுதியது 100% அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் என்பதுதான் உண்மை. அது மட்டுமல்லாமல், பாடத்திட்டக் குழு நிறைவுகொள்ளும் வகையில், குழுவாகவோ தனியாகவோ மீண்டும் மீண்டும் திருத்தி எழுதி, துல்லியமும் எளிமையும் காக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் செலுத்திய உழைப்பு அளப்பரியது.

பாடநூல் ஏன் பெரிதானது?

அப்படியென்றால் ஏன் ஆசிரியர்கள் புதிய பாடநூல்களைச் சுமையாகக் கருதும் பார்வை உருவானது? பக்கங்கள் அதிகரிக்கப்பட்டது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உண்மையில், பக்கங்கள் அதிகரிப்பானது புத்தகத்தை வாசிப்பதை ஒரு இலகுவான அனுபவமாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடே. முந்தைய புத்தகங்களைக் காட்டிலும், புதிய புத்தகங்களில் எழுத்துரு பெரிது, படங்களும் விளக்கங்களும் அதிகம். பள்ளியில் வெறும் கருத்தியலாகவே (Theory) படிப்பதால்தான் கல்லூரிக்கோ போட்டித் தேர்வுக்கோ செல்லும்போது, மாணவர்கள் திணறுகிறார்கள் என்பதை உணர்ந்து, செயல்முறைப் பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டன.

பாடநூல் உருவாக்கப்படும்போது அவை கடைக்கோடி மாணவர் வரை கொண்டுசேர்ப்பது அவசியமாகும். இதுவே சமூகநீதியின் அடிப்படை. இது பாடநூல் உருவாக்கத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது. இதன் வெளிப்பாடு எதுவரை நீண்டது என்றால், புதிய பாடநூல் ஒவ்வொன்றிலும் வெறுமனே பாடம் மட்டும் கொடுக்கப்படாமல், அந்தப் பாடம் தொடர்பான மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டுதல் பக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எந்தப் பாடநூலையும் முழுக்க முழுக்கப் போட்டித் தேர்வு பயிற்சி நூலாகத் தயாரிக்க முடியாது என்பதைக் கல்வியாளர்கள் அறிவார்கள். தமிழ்நாடு பாடநூல் கழகம் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கென ஆறு தொகுதி வினா வங்கிகளை ‘பியர்சன்’ நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அரசால் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் அந்த வினா வங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆக, முழுமையாகவே போட்டித் தேர்வை மையமாகக் கொண்டு, பாடநூல்கள் உருவாக்கப்பட்டன என்றும் சொல்லிவிட முடியாது.

என்ன தீர்வு?

ஆசிரியர்கள் புதிய பாடநூல்களின் முக்கியத்து வத்தையும், அதை எளிமையாக மாணாக்கர்களிடம் கொண்டுசெல்வதையும் தொடர் பயிற்சியாக மேற்கொள்வதுதான் இதற்கான தீர்வு. முன்னதாக, தமிழக அரசே முன்னின்று ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. இதுபோல ஒவ்வொரு பாடத்திலும் கற்பித்தல் முழுமையாக வெற்றியடைய ஆண்டு முழுவதும் அல்லது வார நாட்களில் ஆசிரியர்களுக்கு இணைய வழி பயிற்சி அளிப்பதற்கு உரிய திட்டங்களை வகுத்து, தமிழக அரசு செயல்படுத்தலாம். இந்த ஊரடங்குக் காலத்தைப் பயன் மிக்கதாக உருமாற்றிக்கொள்ள ஆசிரியர்களே இதை ஒரு தன்முயற்சியாகவும் முன்னெடுக்கலாம்.

- சுல்தான் இஸ்மாயில், புதிய பாடத்திட்டக் குழு உறுப்பினர். பாடநூல் உருவாக்கப்படும்போது அவை கடைக்கோடி மாணவர் வரை கொண்டுசேர்ப்பது அவசியமாகும். இதுவே சமூகநீதியின் அடிப்படை. இது பாடநூல் உருவாக்கத்தில் கருத்தில் கொள்ளப்பட்டது. மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டுதல்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன!

CBSE - 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

Tuesday, 14 July 2020

CBSE - 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு. 

images%2528135%2529

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், நேற்று முன்தினம், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை, http://cbseresults.nic.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

 

Five rules of hair care for the rainy season

Monday, 13 July 2020

Hair Loss Due To Dehydration: 4 Tips For Prevention

The monsoon is here, and we all agree that it is a sigh of relief and something to uplift the mood in this depressing period. While the beauty of fresh breeze and refreshing rains must be stealing your hearts, unfortunately, it might also be taking away the lustre from your hair. The monsoons are known to make your hair limp, lifeless and heavy. Hair also gets frizzy due to the high levels of humidity in the air. Don’t let the rainy season take a toll on your tresses. Follow these five rules of hair care and enjoy the rains:
 

1. It’s important to keep the hair and the scalp clean during monsoons. Cleanse your scalp and hair thoroughly with a good shampoo, suitable for your hair type. Do not forget to condition your hair with a nourishing and hydrating conditioner. 

2. During the monsoons, make it a point to get a regular haircut. Trimming and cutting the hair will not only update your style but will also help in getting rid of the annoying split ends and dryness.
 

3. High humidity levels during monsoon can make hair frizzy. After washing your hair, use a microfibre towel to dry hair, which is not harsh on the locks. You can also tame the unruly hair with an application of serum on the towel-dried hair.

4. During monsoons, go for hairstyles which are fuss-free and help in preventing tangles and frizz. Some of the hairstyles we would recommend for the season are sleek ponytail, a neat bun, a creative tidy braid etc.

5. Although staying home is strongly recommended in the present situation, but in case you step out, make sure you take safety measures for yourself and remain careful about your hair. Use hoods, scarves, umbrella, or caps for keeping your hair covered and dry. You can also carry a small hairdryer in your bag to dry your hair in case you get stuck in rains.

Just follow these basic hair care tips and keep your hair monsoon ready!

- With inputs by Agnes Chen, National Technical Head from Streax Professional

குஜராத்:`பிரதமரே வந்தாலும் தடுப்பேன்!’ -அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் காவலர் ராஜினாமா?

Sunday, 12 July 2020

குஜராத்தில் ஊரடங்கை மீறிய அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் போலீஸ் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குஜராத்தில் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளாக இருப்பவர் சுனிதா யாதவ், இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் மாஸ்க் கூட அணியாமல் காரில் வந்துள்ளனர். சுனிதா அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தன் நண்பரும் குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்.
பெண் போலீஸ் சுனிதா
பெண் போலீஸ் சுனிதா
அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சரின் காரில் அவர் மகன் பிரகாஷ் வந்து, தன் நண்பர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார், ஆனால், கான்ஸ்டபிள் சுனிதா விட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. `ஊரடங்கு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்தச் சமயத்தில் இந்தியப் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என சுனிதா கூறியுள்ளார். அதற்கு அமைச்சரின் மகன் `உங்களை (சுனிதா) 365 நாள்களும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என்று கூற, `நான் உங்கள் வீட்டுப் பணியாளோ அடிமையோ இல்லை’ என சுனிதா பதில் அளித்துள்ளார்.
பிறகு சுனிதா, தன் காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து விஷயத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறுமாறு சுனிதாவுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் மகனும் கான்ஸ்டபிள் சுனிதாவும் பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அமைச்சரின் மகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கான்ஸ்டபிள் சுனிதாவுக்கு பாராட்டும் ஆதரவும் தெரிவித்தும் நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த விவகாரம் பெரியதாகவே, நேற்று அமைச்சரின் மகன், நண்பர்கள் அனைவரும், ஊரடங்கை மீறியதாகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கான்ஸ்டபிள் சுனிதா போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. `சுனிதா யாதவ் மருத்துவ விடுமுறையில் உள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’ என சூரத் போலீஸ் கமிஷனர் ஆர்.பி பிரம்பத் கூறியுள்ளார். ஆனால், இந்த பிரச்னைக்குப் பிறகு எழுந்த அழுத்தத்தால் கான்ஸ்டபிள் சுனிதா, தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
தன் மகனின் செயல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் குமார் கனானி, ``என் மகன் அவரின் மாமனாருக்கு கொரோனா சிகிச்சையளிக்க என் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார், அப்போது வழி மறித்த பெண் கான்ஸ்டபிள் வண்டியில் ஏன் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது? நீங்கள் ஏன் இந்தக் காரில் வந்தீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். என் மகன் கூறியதை அந்த கான்ஸ்டபிள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளாமல் விவாதித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குஜராத்தில் சர்ச்சையாகியுள்ளது.

India favourably considering Australia's entry into Malabar exercise: Sources

  • India is favourably considering Australia's keen interest to be part of the next edition of the Malabar naval exercise which is scheduled to be held later this year, people familiar with the development said on Friday.
  • If India decides to include Australia in the exercise, then it will comprise all members of the "Quad" or Quadrilateral coalition which was set up with an aim to ensure peace and stability in the Indo-Pacific and check China's increasing efforts to expand military influence in the region.
  • In November 2017, India, US, Japan and Australia gave shape to the long-pending "Quad" coalition to develop a new strategy to keep the critical sea routes in the Indo-Pacific free of any influence.
  • India is favourably considering Australia's interest to be part of the Malabar exercise, the people cited above said, adding a formal decision is likely to be taken in the next couple of weeks.
  • The indication of India's willingness to include Australia in the Malabar exercise comes in the midst of a bitter border row between Indian and Chinese troops in eastern Ladakh.
  • China has been suspicious about the purpose of the Malabar exercise as it feels that the annual war game is an effort to contain its influence in the Indo-Pacific region.
  • The Malabar exercise started in 1992 as a bilateral drill between the Indian Navy and the US Navy in the Indian Ocean. Japan became a permanent member of the exercise in 2015.

India-China tussle: Here're the latest updates

  • 1 Bihar to replace 16 Bihar regiment at Galwan Valley
  • First phase of disengagement completed at all the friction areas
  • India, China second round of military talks next week
  • India, China agree on complete disengagement of troops from eastern Ladakh
  • India favourably considering Australia's entry into Malabar exercise
  • Chinese JV among six bidders for 44 Vande Bharat trains
  • China, India should be partners rather than rivals: Chinese Ambassador to India

Ashok Gehlot-led Congress govt in Rajasthan plunges into crisis after Deputy CM Sachin Pilot declares open rebellion

 
FILE PIC The Ashok Gehlot-led Congress government in Rajasthan has plunged into crisis after Deputy Chief Minister Sachin Pilot declared open rebellion. Mr Pilot claimed that the Gehlot government has been reduced to a minority as over 30 Congress MLAs are supporting him.

In a statement, Mr Pilot said some independent MLAs have pledged their support to him. Mr Pilot said he will not attend the Congress Legislature Party meeting scheduled to be held today. Mr Pilot had been incommunicado for about two days.

Pilot's supporters said he is camping in Delhi and is upset over a notice sent to him by Rajasthan police. The notice from the Special Operations Group (SOG) has sought time from him to record a statement on an alleged plot to topple the Gehlot government. Pilot supporters say the notice is meant to humiliate him.
Mr Gehlot had on Saturday alleged that the opposition BJP is trying to lure Congress MLAs to topple the state government.
The BJP has dismissed the claim, saying the recent developments only reflected a power struggle between Mr Gehlot and Mr Pilot.

Tamilnadu 12th Std Hall Ticket ( Re - Examination for Absentees )

12-ம் வகுப்பு மறுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கீழ் உள்ள இணைய இணைப்பில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  12-ம் வகுப்பு இறுதித்தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி மறுதேர்வு நடைபெறும்.

Plus Two Re - Examination Hall Ticket - Download here...

9 , 10 ஆம் வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் நேர அறிவி.பு

IMG_20200519_150258

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியில் தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.

1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2.SCV - 98
3. TCCL - 200
4. VK DIGITAL - 55
5. AKSHAYA CABLE - 17
6. Youtube - shorturl.at/pJKV0

இந்த வாய்ப்பினை மாணவர்கள்  நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் காலியாக கிடக்கும் டி.இ.ஓ.,க்கள் தலைமையாசிரியர் பணியிடங்கள் எத்தனை?

தமிழகத்தில் 20 டி.இ.ஓ.,க்கள், 450 அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் கல்வித் துறை உத்தரவுகளை செல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
அமைச்சரின் தினம் ஒரு அறிவிப்புக்கள், தேர்வுத் துறையின் அடுத்தடுத்த உத்தரவுகள் என கொரோனா பேரிடரிலும் கல்வித்துறை 'பிஸி'யாக உள்ளது. தற்போது புத்தகங்கள் வினியோகம், பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், வருகை பதிவு கணக்கிடுவது, விடுபட்ட பிளஸ் 2 தேர்வுக்கு தயாராவது என மாவட்டங்களில் உள்ள டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்களுக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது.ஆசிரியர்கள் எதிர்பார்த்த பொது மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் 20க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள், 250 மேல்நிலை தலைமையாசிரியர், 250 உயர்நிலை தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு ஆசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிப்பதால் உத்தரவுகளை செயல்படுத்துவதில் பாதிப்பு ஏற்படுகிறது. பிற துறைகளில் மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இத்துறையில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பினால் உத்தரவுகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Breaking News: சனிக்கிழமை விடுமுறை ரத்து!

FB_IMG_1594612962448


#Breaking : அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு

* நிலுவையில் உள்ள கோப்புகளுக்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் நடவடிக்கை

* அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவு

* இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும்

* அரசு பணியாளர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து தினமும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப உத்தரவு

கொரோனா காரணமாக 50 சதவீத  ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

Rasi Palan 11th July 2020: இன்றைய ராசிபலன்

Friday, 10 July 2020

Today Rasi Palan, 11th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 11h July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 11, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நட்புவட்டாரம் விரிவடையும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய விவகாரங்களில் தலைமையேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மற்றவர்களுக்காக செலவழிப்பீர்கள். நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வீர்கள். முக்கிய விவகாரங்களில் முடிவு எடுக்க வேண்டி வரும். மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வியாபார நடவடிக்கைகள் திருப்தி தரும்.எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
திறமைகளால் மதிக்கப்படுவீர்கள். வெற்றி ஒருநாளில் கிடைத்துவிடாது என்பதை உணர்வீர்கள். தான் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனம் சஞ்சலப்படும்போது உறுதியான முடிவை எடுக்க முடியாது என்பதை உணர்வீர்கள். பயிற்சியே, முயற்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
புதுப்புது தகவல்களால் உற்சாகம் அடைவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி ஏற்படும். விரயத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள். பொதுநலமாக செயல்படுவீர்கள். நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தடைகளை தகர்த்தெறிவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
கனவுகளை நனவாக்க பாடுபடுவீர்கள். செயல்களில் சிரத்தையுடன் இருப்பீர்கள். உறவுகளை புதுப்பிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
பிரியமானவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். செய்வன திருந்தச்செய் என்பதில் அக்கறை கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவீர்கள். உண்மை கண்டறியும் நிகழ்வுகளில், முன்னணி வகிப்பீர்கள். தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

நீங்களும் மத்திய அரசு பென்ஷன் வாங்க முடியும்... இந்தத் திட்டத்தை தெரியுமா?

NPS Tamil News: தேசிய ஓய்வூதிய முறையின் அடிப்படை, நன்மைகள், தகுதிகள், பங்களிப்பு வரம்பு குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது இங்கு தரப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளக்காரர்கள் மட்டும்தான் பென்ஷன் வாங்க வேண்டுமா? மற்றவர்கள் கூடாதா? படியுங்கள் இந்தச் செய்தியை முழுத் தகவல்களுக்கு!
சம்பளம் வாங்குபவர்களுக்காக தேசிய ஓய்வூதிய முறை (National Pension System- NPS) 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் அனைத்து தரப்பினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

National Pension System Benefits: தேசிய ஓய்வூதிய முறை

உங்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதியை திரட்டுவதற்கு நீங்கள் தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் பணத்தை குறைந்த அளவில் பங்களிப்பு செய்யலாம். சம்பளம் வாங்குபவர்களுக்கு இருக்கின்ற வருங்கால வைப்பு நிதி திட்டம் போல சுய தொழில் செய்பவர்களுக்கு எந்த திட்டமும் இல்லாத காரணத்தால் இது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை யார் துவக்க முடியும்?
இந்திய குடிமகன் மற்றும் இந்திய கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களும் இந்த கணக்கை துவக்கலாம். தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கணக்கு துவங்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக, அதிகப்பட்சம் 65 வயதுக்கு உள்ளானவராகவும் இருக்க வேண்டும். 60 வயதுக்குள் இந்த முறையின் கீழ் கணக்கு துவங்கியவர்களுக்கு, அவர்கள் 60 வயது அடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும்.
தேசிய ஓய்வூதிய முறை கணக்கில் பங்களிப்பு செலுத்துவதற்கான வரம்பு
பொது வருங்கால வைப்பு நிதியில் வருடத்துக்கு ரூபாய் 1.50 லட்சத்துக்கு மேல் டெப்பாசிட் செய்ய முடியாது. ஆனால் தேசிய ஓய்வூதிய முறை கணக்கில் இதுபோன்ற எந்த வரம்பும் இல்லை எனவே நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கில் பங்களிப்பு செய்யலாம்.
இந்த கணக்கை எங்கே துவங்க முடியும்?
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலமாக துவங்கலாம். ஆன்லைன் மூலமாக துவங்க NDSL வலைதளத்துக்கு சென்று துவங்க வேண்டும்.
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஆப்லைன் (offline) மூலமாக துவங்க அரசு நியமித்துள்ள நிறுவனங்கள் பின்வருமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், இந்திய தபால் துறை, Stock Holding Corporation, UTI Asset Management Company மற்றும் UTI Technology Services Limited ஆகியவை.
Joint holding and nomination
தேசிய ஓய்வூதிய முறை கணக்கை ஒரு பெயரில் மட்டும்தான் துவங்க முடியும் ஆனால் நீங்கள் அதிகப்பட்சமாக மூன்று nominee களை உங்கள் கணக்குக்கு நியமிக்கலாம். மேலும் nominee களை நீங்கள் கணக்கு துவங்கும் போது நியமிக்க வேண்டும். nominee 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ அல்லது மைனராகவோ (minor) இருக்கலாம். மைனராக இருக்கும் பட்சத்தில் அவரது பாதுகாவலர் குறித்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட nominee களை நியமிக்கும் போது அவர்களுக்கு எவ்வளவு பங்கு என்பதை சதவிகித அடிப்படையில் குறிப்பிட வேண்டும்.
ஒருவர் வருங்கால வைப்பு கணக்கையும் தேதிய ஓய்வூதிய கணக்கையும் வைத்துக் கொள்ள முடியுமா ?
வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணியாளர்களால் மட்டுமே சேர முடியும். ஆனால் தேதிய ஓய்வூதிய கணக்கை சம்பளம் வாங்குபவர் அல்லது சுய தொழில் செய்பவர் என யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதே நேரம் சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர் இந்த இரண்டு கணக்குகளையும் ஒரே நேரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

Stomach Weight Loss Tips In Tamil | தொப்பையை குறைப்பது இவ்வளவு சுலபமா?

Weight Loss Tips In Tamil: சரிபாதி நபர்களுக்கு பிரச்னை உடல் எடைதான். இதற்காக மருந்து, மாத்திரைகள், ஆபரேஷன் என களம் இறங்கி விடுபவர்கள் உண்டு. அதெல்லாம் அவசியமில்லை, அன்றாடம் வீட்டில் கிடைக்கும் எளிமையான உணவுப் பொருட்களைக் கொண்டே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முடியும் என்கிறார்கள், உணவுத்துறை வல்லுனர்கள்.
அப்படி பலராலும் பரிந்துரைக்கப்படும் எளிய ஒரு உணவு வகை பற்றி இங்கு பார்க்கலாம். அது, இஞ்சி-எலுமிச்சை-தேன் கலவைதான். இதை எப்படி தயாரிப்பது?

Stomach Weight Loss Tips In Tamil: தொப்பை குறைய எலுமிச்சை, இஞ்சி

1. ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். போதுமான அளவுக்கு இஞ்சி எடுத்துக் கொண்டு அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.
2. இன்னொருபுறம் 3 டம்ளர் அளவுக்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீரில் மசித்த இஞ்சியை 5 முதல் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. பின்னர் இஞ்சி கரைசலை வடித்து, இஞ்சி துகள்களை அகற்றவும். துகள்கள் அகற்றப்பட்ட இஞ்சி கரைசலுடன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
4. குடிக்கப் போதுமான அளவு குளிர வைக்கவும். தேவையைப் பொறுத்து தேன் சேர்த்துக் கொள்ளவும். தேன் கட்டாயம் அல்ல.
5. பிரிட்ஜில் வைத்தும் இந்த இஞ்சி-லெமன்-தேன் கலவையை பயன்படுத்தலாம். ஒரு நாளில் 3 வேளை எடுத்துக் கொள்வது நலம்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்ஸ், ஷாகால்ஸ் ஆகியன செரிமானத்தை அதிகப்படுத்தக் கூடியவை. இது உடல் எடை குறைவுக்கு வெகுவாக உதவும். அதேபோல எலுமிச்சையில் விட்டமின் சி மட்டுமன்றி, கலோரியை எரிக்கக்கூடிய தன்மையும் இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து, எடைக் குறைப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ICSE - 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

Thursday, 9 July 2020

Screenshot_20200710_074024

ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சான்றிதழ் கல்வி வாரியமான ஐ.சி.எஸ்.இ. தலைமை செயல் அதிகாரி ஜெர்ரி அரத்துாண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Screenshot_20200710_074044

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. முடிவுகளை ஐ.சி.எஸ்.இ.யின் www.cisce.org என்ற இணையதளம் வழியாகவும் மாணவர்களுக்கான அலைபேசி எஸ்.எம்.எஸ். வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மறு ஆய்வின் வழியே தெரிந்து கொள்ள ஜூலை 16ம் தேதிக்குள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு தாளுக்கும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டிஜிட்டல் வழியில் பதிவிறக்கம் செய்யலாம். மத்திய அரசின் 'டிஜி லாக்கர்' தளத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வை எழுதவில்லை எனில் தேர்ச்சி இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்!

images%2528138%2529

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதாத விடுபட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கோபி அடுத்த கொளப்பலூரில் உள்ள அரசு பள்ளியில் கூடுதல் கட்டடத்திற்கான பணியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுபட்ட 12-ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்றும் தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் எனவும் பாடங்களை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்புச் செய்திகள்!

பத்தாம் வகுப்பு முதல்
பட்டப்படிப்பு வரை
படித்துவிட்டு வேலைவாய்ப்பிற்கு
காத்திருப்போர் திருப்பூரில் பணிபுரிய விருப்பமா? தற்காலிக வேலை, நிரந்தர வேலை வேண்டுமா?
அழைக்கவும் 9150490460.
******************************************
Accountant, Data entry Operator.

IVLR group Madurai.

Qualification : B.Com , M.Com , M.B.A , M.F.C.

Note : Candidate must have a Knowledge in Tally , GST , Cash Management , TDS etc.

 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை hr .ivlrgroup @ gmail.com முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9677766602 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .

Flash News : Plus Two Re-Exam Date Announced! பிளஸ்டூ இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு'!

Flash News : Plus Two Re-Exam Date Announced! பிளஸ்டூ இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு'!

images%252840%2529
 

பிளஸ்-2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 இல் தேர்வு நடத்த அரசு முடிவு என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
* 13 முதல் 17ஆம் தேதி வரை பள்ளிகளில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்

* தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது

* மாணவர்கள் தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள்

Rahu Ketu Peyarchi 2020 | ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – 2020

குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு – கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது.
ராகு – கேது பெயர்ச்சிக்கான பொது பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.
சாயா கிரகங்களான ராகு – கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார்வரி வருஷம் – தக்ஷிணாயனம் – வர்ஷ ரிது – ஆவணி மாதம் 16ம் தேதி – செவ்வாய்க்கிழமை – 01.09.2020 – அன்றைய தினம் தினசுத்தி அறிவது – பௌர்ணமியும் – அவிட்ட நக்ஷத்ட்ரமும் – அதிகண்ட நாமயோகமும் – பத்ரை கரணமும் – சித்தயோகமும் – கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மதியம் 2.16க்கு (நாழிகை: 20.24) தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மாறக்கூடிய ராகு பகவான் பிலவ வருஷம் – உத்தராயணம் – சிசிர ரிது – பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) – திங்கள்கிழமை வரை ரிஷபத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.
கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மாறக்கூடிய கேது பகவான் பிலவ வருஷம் – உத்தராயணம் – சிசிர ரிது – பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) – திங்கள்கிழமை வரை விருச்சிகத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.
பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.
ராகு – கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.
பொது பலன்கள்:
அறிவியல் பூர்வமாக நமது டிஎன்ஏ-தான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு – கேது என்னும் கிரகங்கள் டிஎன்ஏ போலதான். ராகுவை வைத்து தகப்பனார் வழிகளையும் – கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்துகொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர்.
ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் – பிதுர் தோஷம் – புத்திர தோஷம் போன்றவற்றைச் சொல்ல முடியும். கல்வி – ஞானம் – திருமணம் – மக்கட்பேறு – வேலை – வெளிநாடு சம்பாத்தியம் – கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு – கேது முக்கியமானவர்களாகும்.
கடக ராசி மற்றும் மகர ராசி என்பது சர ராசியாகும். இதில் கடக ராசி பஞ்ச பூத தத்துவத்தில் நீரையும் – மகர ராசி என்பது பஞ்ச பூத தத்துவத்தில் நிலத்தையும் குறிக்கும். ராகு என்பது மிகப் பெரிய என்ற விஷயங்களையும் கேது என்பது குறுகிய விஷயங்களையும் குறிக்கும்.
இந்த பெயர்ச்சியினால் வறட்சி குறையும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். ஏரி, குளம் போன்றவை நிரம்பும். அரசாங்கம் சார்ந்த விஷயங்களிலிருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். புதிய ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தண்ணீர் சார்ந்த இடங்களில் அதிகளவு விபத்து – அகால மரணங்கள் போன்றவை ஏற்படும்.
விமானம் – கப்பல் போன்றவற்றில் அடிக்கடி பழுதாவதும் அதை சரி செய்வதுமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்த தொய்வு நீங்கும். அமெரிக்க தேசத்தில் இருந்து வரும் சுணக்க நிலை மாறும்.
இஸ்லாமிய தேசங்களில் ஒற்றுமையுணர்வு ஓங்கும். இந்திய தேசத்தைப் பொருத்தமட்டில் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் ஏற்றம் பெறும். ராணுவ ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சி அடையும்.
ராகு
தன்மை    – பெண்
வடிவம்    – நெடியர்
நிறம்    – கறுப்பு
குணம்    – தாமஸம்
பிணி    – பித்தம்
திக்கு    – தென்மேற்கு
ரத்தினம்    – கோமேதகம்
தான்யம்    – உளுந்து
புஷ்பம்    – மந்தாரை
சமித்து    – அறுகு
வாகனம்    – ஆடு
சுவை    – கைப்பு
உலோகம்    – கருங்கல்
ராசிகளில் சஞ்சரிக்கும் காலம்    – ஒன்றரை வருட காலம்
வஸ்திரம்    – கறுப்பு
தேவதை    – காளியம்மன்
உச்ச ராசி    – விருச்சிகம்
நீச ராசி    – ரிஷபம்
நட்பு ராசி    – மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம்
மூலத் திரிகோணம்    – கும்பம்
நக்ஷத்ரங்கள்    – திருவாதிரை, சுவாதி, சதயம்
திசை வருடம்    – 18 வருடங்கள்
நட்பு கிரகம்    – சுக்கிரன், சனி
பகை கிரகம்    – சந்திரன், செவ்வாய், சூரியன்
பார்வை    – 7-வது பார்வை
காரகன்    – பிதாமககாரகன்
உறுப்பு    – கணுக்கால், முழங்கால்
கேது
தன்மை    – அலி
வடிவம்    – நெடியர்
நிறம்    – சிவப்பு
குணம்    – தாமஸம்
பிணி    – பித்தம்
திக்கு    – வடமேற்கு
ரத்தினம்    – வைடூரியம்
தான்யம்    – கொள்ளு
புஷ்பம்    – செவ்வல்லி
சமித்து    – செம்மரம்
வாகனம்    – சிங்கம்
சுவை    – உரைப்பு
உலோகம்    – துருக்கல்
ராசிகளில் சஞ்சரிக்கும் காலம்    – ஒன்றரை வருட காலம்
வஸ்திரம்    – பலவண்ணங்கள்
தேவதை    – வினாயகர்
உச்ச ராசி    – கும்பம்
நீச ராசி    – சிம்மம்
நட்பு ராசி    – மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
மூலத் திரிகோணம்    – சிம்மம்
நக்ஷத்ரங்கள்    – அஸ்வினி, மகம், மூலம்
திசை வருடம்    – 7 வருடங்கள்
நட்பு கிரகம்    – சுக்கிரன், சனி
பகை கிரகம்    – சந்திரன், செவ்வாய், சூரியன்
பார்வை    – 7-வது பார்வை
காரகன்    – மாதாமகாரகன்
உறுப்பு    – கை, தோள்

 

 

Most Reading

Sidebar One

Contact Form

Name

Email *

Message *