Search

SBI ATM CARD பயன்படுத்துபவரா நீங்கள்..?

Wednesday, 31 October 2018


Image result for sbi atm 


எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் (அக்டோபர் 31) அமலுக்கு வருகிறத

எஸ்பிஐ வங்கி மாஸ்டர் டெபிட் கார்டு, மேஸ்ட்ரோ டெபிட் கார்டு, கிளாசி டெபிட் கார்டு என பலவகையான டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்பட்சத்தில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் வழியாக நாம் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பணமில்லா பரிவர்த்தனைக்கும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதனிடையே எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

 ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பெருநகரங்கள், நகரங்களில் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூபாய் 3000 வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று எஸ்பிஐ ஏடிம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ ஏடிம்களில் மாதத்திற்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். மீறி எடுக்கும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அதேசமயம் எஸ்பிஐ கார்டை மற்ற வங்கியின் ஏடிஎம்களில் பயன்படுத்தினால் மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க முடியும்.
இதுபோன்ற கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

'நீட்' நுழைவு தேர்வு பதிவு துவங்கியது | NEET Exam Application On www.nta.ac.in Apply Now

பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நேற்று நள்ளிரவில் துவங்கியது.

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலைகல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தியது. இந்த ஆண்டு முதல், தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது. நீட் தேர்வுக்கான அட்டவணை, என்.டி.ஏ., சார்பில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மே, 5ல், நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். இந்த முறை, தமிழ் உட்பட, 10க்கும் மேற்பட்ட, மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல் துவங்கியது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம்.மாணவர்களின் வசதிக்காக, நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வுஉதவி மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு எழுதுவதற்கு, 'ஆதார்' கட்டாயம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், தமிழ் உள்ளிட்டமாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றில், மொழி மாற்ற பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே, பதில் எழுத வேண்டும். அதன் அடிப்படையிலேயே விடை திருத்தம் செய்யப்படும் என, மத்திய மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தீபாவளிக்கு காலை | இரவு 1 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் | உச்சநீதிமன்றம்



 தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ளது. தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்த நிலையில் அதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 1 மணிநேரமும், இரவு 1 மணி நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 முதல் 5 மணி வரை பட்டாசு வெடித்து கொள்ளலாம் என்றும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பெசோ' வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த ஆண்டு மட்டும் விற்கலாம் என்றும் அடுத்த ஆண்டு விற்கக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு காலை 4-6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி கோரிய நிலையில் உச்சநீதிமன்றம் தனித்தனியே நேரம் உதுக்கீடு செய்துள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆட்சியர் தொடங்கி வி.ஏ.ஒ. வரை அனைவரும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Courtesy: Denakaran - Click Here
 

Most Reading

Sidebar One

Contact Form

Name

Email *

Message *