CBSE - 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், நேற்று முன்தினம், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை, http://cbseresults.nic.in/ என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.