TN assembly session will to be convened on june 16th with Governor's speech
வரும் ஜூன் 16-ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
தமிழக சட்டசபை ஜூன் 16-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து நேற்று மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து சபாநாயகராக பொறுப்பேற்ற தனபால், சட்டப்பேரவையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், 15-வது சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் ஜூன் 16-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்த உள்ளதாகவும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
Read More: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-assembly-session-will-be-convened-on-june-16th-255250.html

No comments:
Post a Comment